Followers

Followers

Monday, 24 October 2016

கிரிவலம்.....காஞ்சி பெரியவா.(6)..

அவ்வளவுதான் எல்லாரும் எழுந்துண்டுட்டா. கிரிவலம் வர்றவாளுக்கு அன்னதானம் பண்ணறது. அதுவும் இனிப்போட தர்றதுன்னு தீர்மானிச்சா. ஆனா, பரிசாரகர் சொன்ன ஒரு விஷயம் அவாளை யோசிக்க வைச்சுது. முகாம்ல கொஞ்சமே கொஞ்சம்தான் அரிசி இருக்கு. அதைவைச்சுண்டு, எப்படி லட்சக்கணக்கானவாளுக்கு அன்னதானம் பண்ண சமைக்கறதுன்னுதான் கேள்வி எழுப்பினார் அவர்.

அந்த அர்த்தராத்திரியில எங்கேயும் போய் அரிசி கேட்கவோ, வாங்கிண்டு வரவோ வசதி கிடையாது. அன்னதானம் பண்ணணும்னா, விடியற்காலம்பறவே சமையல் பண்ணிடணும் அதனால என்ன செய்யறதுன்னு அவா யோசிச்சுண்டு இருந்தப்போ, முகாமோட வாசல்ல மாட்டுவண்டி ஒண்ணு வந்து நின்றது

4 comments:

  1. //கிரிவலம் வர்றவாளுக்கு அன்னதானம் பண்ணறது. அதுவும் இனிப்போட தர்றதுன்னு தீர்மானிச்சா.//

    வெரி குட். ஆஹா, இனிப்பானதோர் தீர்மானம்.

    ReplyDelete
  2. //அன்னதானம் பண்ணணும்னா, விடியற்காலம்பறவே சமையல் பண்ணிடணும் அதனால என்ன செய்யறதுன்னு அவா யோசிச்சுண்டு இருந்தப்போ, முகாமோட வாசல்ல மாட்டுவண்டி ஒண்ணு வந்து நின்றது//

    முக்காலமும் உணர்ந்த மஹான்கள் மனதில் ஒரு நற்கார்யத்தை செய்ய நினைத்துவிட்டால் உடனே எப்படியோ அது வெற்றிகரமாக முடிந்து விடும்.

    வந்து நின்ற மாட்டு வண்டியில் என்ன இருந்தது என்பதை அறிய ஆவலுடன் ..... தொடரட்டும்.

    ReplyDelete
  3. கோபு பெரிப்பா சீக்கிரமே எழுந்துட்டேளா

    ReplyDelete
    Replies
    1. happy 24 October 2016 at 20:35

      //கோபு பெரிப்பா சீக்கிரமே எழுந்துட்டேளா//

      ஆமாம்....டா ஹாப்பி. இன்னும் என் தூக்கம் முழுவதுமாகக் கலையவில்லை. பாதித் தூக்கத்தில் ’மூச்சா’ போக எழுந்து கொண்டேன். அப்படியே அந்த இடத்திலும் + மூஞ்சியிலும் தண்ணீரை அடித்துக்கொண்டு, கை கால் அலம்பிண்டு வந்து இங்கு எட்டிப்பார்த்துள்ளேன். :))))) குட் மார்னிங்.....டா செல்லம்.

      Delete