Followers

Followers

Wednesday, 26 October 2016

கிரிவலம்...காஞ்சி பெரியவா..(8)..

அன்னதானத்துக்கு ஆசார்யாளோட அனுகிரகம் கிடைச்சுடுத்துங்கறதைப் புரிஞ்சுண்டு மளமளன்னு அடுப்பைப் பத்தவைச்சு சமையலைத் தொடங்கினா எல்லாரும் உளுந்தும் சர்க்கரையும் கிடைச்சுட்டதால ஜாங்கிரியும் சேர்த்துத் தரலாம்னு தீர்மானிச்சு பண்ண ஆரம்பிச்சுட்டா.

எல்லாரும் சமைக்கறதுல தீவிரமா இருந்ததுல மணியைக்கூட பார்க்கலை. தீர்மானிச்சபடி மூணுமணிக்கு டாண்ணு பிரதட்சணத்தை ஆரம்பிச்சட்ட ஆசார்யா, சமைச்சுண்டு இருந்தவா பக்கம் மெதுவா திரும்பினார். "முப்பது மூட்டை அரிசி... அன்னதானம் பண்ண போதுமோன்னோ! பக்குவமா பண்ணி ஒருத்தர் விடாம எல்லாருக்கும் குடுத்துடுங்கோ!' சொன்னவர், மௌனமா புன்னகைச்சட்ட நடக்க ஆரம்பிச்சுட்டார்.

4 comments:

  1. ஆஹா ... விடியற்காலம் மூன்று மணிக்கே தீர்மானிச்சபடி டாண்ணு பிரதக்ஷணத்தை ஆரம்பித்து விட்டார்களே, மஹா பெரியவா. !!!!!

    இதே போல ஒரு நாள், மார்கழி மாதக் குளிரில், விடியற்காலம் 3.30 மணிக்கு மஹா பெரியவாளுடன், காஞ்சீபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலின் மிகப்பெரிய மிக நீண்ட வெளிப்பிராகாரத்தைச் சுற்றிவரும் பாக்யம் எனக்கும் கிடைத்துள்ளது.

    அதைப்பற்றியும் நான் எழுதிய 108 பகுதிகளில், எதோ ஒன்றில் வருகிறது.

    நீ ஏனோ 2-3 நாட்களாக என் பதிவுகள் பக்கம் பிரதக்ஷணத்திற்கு வருவதே இல்லை. :(

    தீபாவளி லேகியம், உக்காரை, இரண்டு ஸ்வீட், இரண்டு காரம் போன்றவற்றில் பிஸியாகி விட்டாயோ என்னவோ.

    ReplyDelete
  2. முப்பது மூட்டை அரிசியையும் சமைத்து, ஜாங்கிரி வேறு செய்து, அன்னதானம் செய்யப்போகிறார்கள். இதையெல்லாம் கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது.

    ஜாங்கிரி போன்ற இனிமையான இந்தப் பதிவு மேலும் ஹாப்பி யாகத் தொடரட்டும். வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. ஆமா பெரிப்பா. அடுப்படில பிஸி ஆகிட்டேன். மன்னிக்கு நாளை....சனி ஞாயிறுதான் லீவு தீபாவளி கழிஞ்சள்பறமா அங்க வறேன்...

    ReplyDelete
    Replies
    1. happy 26 October 2016 at 22:09

      //ஆமா பெரிப்பா. அடுப்படில பிஸி ஆகிட்டேன். மன்னிக்கு நாளை....சனி ஞாயிறுதான் லீவு தீபாவளி கழிஞ்சள்பறமா அங்க வறேன்...//

      ஓக்கே .... நோ ப்ராப்ளம்.

      உன் .... அடுப்பு - அடி - யில் எப்போதும் ஜாக்கிரதையாக கவனமாக இரு.

      இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

      Delete