Followers

Followers

Wednesday, 28 September 2016

பூதம் காட்டிய புண்ணிய வழி..

பூதம் காட்டிய
-----------------------------------
புண்ணியவழி
-----------------------------
இரண்டு நாட்கள் கோவிலுக்கு போய் வந்து,

பச்... சாமியாவது ஒண்ணாவது... என்று சலித்துக் கொள்வது,

ஏழெட்டு ஜோசியர்களை பார்த்து, ஜோசியமே பொய்... என்று புலம்புவது,

பொழுதை எல்லாம் வீணாகப் போக்கி, நமக்கெல்லாம் எங்கே நல்ல காலம் வரப் போகுது...

என்று, விரக்தியின் விளம்பில் நிற்பது மனிதர்களின் இயல்பு.

சில வினாடிகள் கூட, கஷ்டத்தை தாங்கத் தயாராக இல்லாத நாம், நூறு ஆண்டுகளுக்கு ஆனந்தமாக வாழ ஆசைப்படுகிறோம்.

கார் ஓட்டத் தெரியா விட்டாலும், போக்குவரத்து விதிகளை தெரிந்து கொள்வது போல்,

மகான்களின் வாழ்க்கையை தெரிந்து கொள்வதன் மூலம்

மனதில் அமைதி ஏற்படும்.

எந்நேரமும், ராம தியானத்திலேயே இருப்பவர், ராம்போலோ.

தினமும் காலையில் எழுந்து நீராடி, அனுஷ்டானம் முடிந்த பின்,

மீதியுள்ள தீர்த்தத்தை, அருகில் உள்ள மரத்தில் ஊற்றுவது அவர் வழக்கம்.

இது, 12 ஆண்டுகள் தொடர்ந்தது.

திடீரென்று ஒருநாள், ராம்போலோ எதிரில், பூதம் ஒன்று தோன்றி,

"  ராம பக்தா...

குளம், ஏரி என, பல இடங்களில் உள்ள நீரையெல்லாம் அருந்தியும், என் தாகம் தீரவில்லை;

இவ்வளவு நாட்களாக நீ வார்த்த தீர்த்தத்தால், என் தாகம் தீர்ந்து, சாப விமோசனம் கிடைத்தது.

என் துயர் தீர்த்த உனக்கு என்ன வேண்டும் கேள்... " என்றது.

"  ஸ்ரீராமரை நேரில் தரிசிக்க வேண்டும்; அதுவே என் விருப்பம்...  " என்று, தன் விருப்பத்தை வெளியிட்டார், ராம்போலோ.

பூதமோ,  " அருகில் உள்ள வீதியில் ராமாயண உபன்யாசம் நடைபெறுகிறது;

அதை கேட்க, தினமும் முதியவர் வடிவில் வருகிறார், மாருதி.

அவரை பிடித்தால், உன் விருப்பம் நிறைவேறும்...  ' என்று சொல்லி மறைந்தது.

ராமாயண உபன்யாசம் நடைபெறும் இடத்திற்கு, தினமும் முதல் ஆளாக வந்து,

அனைவரும் வெளியேறிய பின், கடைசி ஆளாக வெளியேறுவார் ஆஞ்சநேயர்.

பூதம் கூறிய இடத்திற்கு புறப்பட்ட ராம்போலோ,

முதியவர் வடிவில் அமர்ந்திருப்பது ஆஞ்சநேயர் என்பதை அறிந்து,

அவர் அருகில் அமர்ந்தார்.

ஆஞ்சநேய முதியவரோ இரு கரங்களையும் கூப்பியபடி கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிய அமர்ந்திருந்தார்.

தன் மேலாடையில், ஆஞ்சநேயரை கட்டினார், ராம்போலோ.

வழக்கப்படி, உபன்யாசம் முடிந்து அனைவரும் வெளியேறியவுடன், முதியவரும் வெளியேறத் துவங்கினார்.

கூடவே, ராம்போலோவும் புறப்பட்டார்.

விவரம் புரிந்த முதியவர், வேகமாக நடக்கத் துவங்கினார்.

சில வினாடிகளில், முதியவர் ஓட ஆரம்பித்தார்.

அவருடைய வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல், விழுந்து, எழுந்து ஓடினார், ராம்போலோ.

உடம்பெல்லாம் காயங்கள்; ரத்தம் வெளியேற துவங்கியது.

அந்நிலையிலும், அவர் தன் பிடியை விடவில்லை.

கடைசியில், முதியவர் மனமிரங்கி, தன் நிஜ வடிவான ஆஞ்சநேய வடிவத்தை காண்பித்து,

" ராம்போலோ... உன் விடாமுயற்சியும், தீவிர பக்தியும், உண்மையிலேயே என்னைக் கட்டிப் போட்டு விட்டன; வேண்டியதைக் கேள்... " என்றார்.

" அஞ்சனை மைந்தா... அடியேன் ஸ்ரீராம தரிசனம் பெற ஆசைப்படுகிறேன்..." என்றார்.

ஆஞ்சநேயர் அருளால் ஸ்ரீராமர் அவருக்கு தரிசனம் தந்து,

' பக்தா... என் வரலாற்றை நீ உனக்கு தெரிந்த மொழியில் எளிமையாக எழுது; அது என்றென்றும் நிலைத்து நிற்கும்... ' என்று ஆசி கூறி, மறைந்தார்.

ராம்போலோவும் அப்படியே எழுதி முடித்தார்.

பக்தி மயமான அந்நூல், ராம் சரிதமானஸ் எனப்பட்டது.

இந்நூலை எழுதிய ராம்போலோவே, துளசி ராமாயணத்தை எழுதிய துளசிதாசர்!

விடாமுயற்சியும், தீவிர பக்தியும் இருந்தால், தெய்வம் நேராக வந்து தரிசனம் அளிக்கும்.

7 comments:

 1. ஆஹா, மிகவும் அருமையான கதையை எங்கட செல்லக்குழந்தை ஹாப்பி அற்புதமாக எழுதி வெளியிட்டுள்ளதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது.

  >>>>>

  ReplyDelete
 2. //இந்நூலை எழுதிய ராம்போலோவே, துளசி ராமாயணத்தை எழுதிய துளசிதாசர்!//

  ஆஹா, துளசிதாஸர் சரித்திரம் அறிய முடிந்ததில் மேலும் மகிழ்ச்சி.

  >>>>>

  ReplyDelete
 3. //விடாமுயற்சியும், தீவிர பக்தியும் இருந்தால், தெய்வம் நேராக வந்து தரிசனம் அளிக்கும்.//

  அது நேராக வந்தாலும் சரி ... வராவிட்டாலும் சரி ... நமக்கு சொர்க்கவாசலைத் திறந்து விட்டாலே இப்போதைக்கு நிம்மதிதான்.

  >>>>>

  ReplyDelete
 4. //ராமாயண உபன்யாசம் நடைபெறும் இடத்திற்கு, தினமும் முதல் ஆளாக வந்து, அனைவரும் வெளியேறிய பின், கடைசி ஆளாக வெளியேறுவார் ஆஞ்சநேயர்.//

  ஆமாம். இராமாயணம் நடக்கும் இடத்தில் எல்லாம் ஆஞ்சநேயர் அமர என்றே ஓர் பலகையில் கோலம் போட்டு வைத்திருப்பார்கள். நானும் பார்த்திருக்கிறேன்.

  >>>>>

  ReplyDelete
 5. //" ஸ்ரீராமரை நேரில் தரிசிக்க வேண்டும்; அதுவே என் விருப்பம்... " என்று, தன் விருப்பத்தை வெளியிட்டார், ராம்போலோ. //

  தியாகப்பிரும்மம் என்று அழைக்கப்படும் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரும் இதற்கே ஆசைப்பட்டார்.

  அவர் தகப்பனார் ராமப் பிரும்மம், தன் வயதான காலத்தில், ராமன் திருவடிகளைப் போய் சேர்வதற்கு முன்பு, தன் மகனிடம் சூத்ரத்தை (தான் இதுவரை செய்து வந்த ஜப மாலையை) கொடுத்துவிட்டு, ”ராம ராம, ராம, ராம என்று ஸதா ஜபித்துக்கொண்டே இரு. எப்போ நூறு கோடி ராம நாமம் பூர்த்தியாகிறதோ, அப்போ ஸ்ரீராமன் உனக்குக் காட்சி தருவார்” எனச் சொல்லிக்கொண்டே கண்ணை மூடிவிட்டார்.

  >>>>>

  ReplyDelete
 6. மை டியர் ஹாப்பி, நல்லதொரு பதிவினை இன்று கொடுத்துள்ளாய். என் மனம் நிறைந்த பாராட்டுகள் + வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  சீக்கரமாக நல்ல செய்தி எனக்குச் சொல்லவும். ஏதேனும் உதவி தேவை என்றால் கூச்சப்படாமல் என்னிடம் கேட்கவும்.

  ReplyDelete
 7. கோபு பெரிப்பா பதிவை விட உங்க கமெண்ட் எல்லாம்தான் நன்னா இருக்கு..ஒவ்வொருகமெண்ட்லயும் பதில் சொல்ல ஆசைதான்.. அந்த அளவுக்கு எதுவுமே எழுத தெரியல..

  ReplyDelete