Followers

Followers

Thursday 20 October 2016

கிரிவலம்....காஞ்சி பெரியவா..(2).

சாட்சாத் அந்தப் பரமேஸ்வரனோட அம்சமாவே வாழ்ந்த பரமாசார்யாளும் அப்படித்தான். எப்பவும் எல்லாரும் நன்னா இருக்கணும். யார் யாருக்கு என்னென்ன தேவையோ அதை தேவை அறிஞ்சு பண்ணணும்கறதையே எப்பவும் சிந்தனையா வைச்சுண்டு இருந்தார்.

திருவண்ணாமலைக்குப் பக்கத்துல காஞ்சி கடலாடின்னு ஒரு கிராமம் இருக்கு. சிங்கம், புலி எல்லாம்கூட உலாவிண்டு இருந்துது. பக்ல்லயே அங்கே போறது ரொம்ப சிரமம். அந்த இடத்துக்குப் பக்கத்துல பெரிய மலைகள் எல்லாம் இருக்கு. அந்த மலைகள்ல ஒண்ணுல பரமேஸ்வரனும், ஈஸ்வரியும் கோயில்கொண்டிருக்கா. அந்த மலைக்குப் பேரு பர்வதமலை. சுவாமி, மல்லிகார்ஜூனர். அம்பாள் பிரமராம்பிகை.

2 comments:

  1. //சாட்சாத் அந்தப் பரமேஸ்வரனோட அம்சமாவே வாழ்ந்த பரமாசார்யாளும் அப்படித்தான். எப்பவும் எல்லாரும் நன்னா இருக்கணும். யார் யாருக்கு என்னென்ன தேவையோ அதை தேவை அறிஞ்சு பண்ணணும்கறதையே எப்பவும் சிந்தனையா வைச்சுண்டு இருந்தார்.//

    நடமாடும் தெய்வமாக, நம்மிடைய, நம் காலத்தில், அதுவும் மிகச் சமீபகாலத்தில் வாழ்ந்த மஹா பெரிய மஹான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா அவர்கள்.

    அவரைப்பற்றிய என் சொந்த அனுபவங்கள், பிறர் வாயால் நான் கேட்டுள்ளவை, படித்துள்ளவதை போன்றவற்றை 108 பகுதிகளாகப் பிரித்து தொடர்ச்சியாக என் வலைத்தளத்தினில் வெளியிட்டுள்ளேன்.

    -=-=-=-=-=-

    பகுதி-001 க்கான இணைப்பு: http://gopu1949.blogspot.in/2013/05/1.html
    வெயிட்லெஸ் விநாயகர்

    பகுதி-108 க்கான இணைப்பு:
    http://gopu1949.blogspot.in/2014/01/108.html
    ஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை?

    -=-=-=-=-=-

    கிரிவலம்....காஞ்சி பெரியவா.. மேலும் தொடர என் வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. வாங்கோ பெரிப்பா...உங்க பதிவு பக்கமும் வறேன்..

    ReplyDelete