Followers

Followers

Wednesday 5 October 2016

நவராத்திரி நாயகியர் (4)

லோக மாதாக்களாக இருக்கப்பட்ட தெய்வங்களைக் குழந்தையாக வரச் சொன்னதில் நிரம்ப விசேஷம் இருக்கிறது. 'குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே' என்கிறோம். தெய்வமே குழந்தையாக வந்தால், ரொம்பக் கொண்டாட்டமாகும். குழந்தைக்கு நம்மைப் போல் காமமும் குரோதமும் துக்கமும் வேரூன்றி இருப்பதில்லை. இந்த க்ஷணத்தில் ரொம்பவும் ஆசைப்பட்ட ஒரு வஸ்துவை அடுத்த க்ஷணத்தில் தூக்கிப் போட்டுவிட்டுப் போகிறது. கோபமும் இப்படியே சுவடு தெரியாமல் நிமிஷத்தில் மறைந்து போகிறது. அழுகையும் இவ்வாறேதான். நாம்தான் உணர்ச்சிகளை ஆழ உள்ளுக்கு வாங்கிக்கொண்டு மனத்தைக் கெடுத்துக் கொள்கிறோம். உணர்ச்சிகள் வேரூன்றாமல் குழந்தைகள் போல் நாமும் ஆனந்தமாக இருக்க வேண்டும். இதனால்தான் உபநிஷதமும் 'குழந்தையாய் இரு' என்கிறது.

2 comments:

  1. //உணர்ச்சிகள் வேரூன்றாமல் குழந்தைகள் போல் நாமும் ஆனந்தமாக இருக்க வேண்டும்.

    இதனால்தான் உபநிஷதமும் 'குழந்தையாய் இரு' என்கிறது.//

    ஆஹா, எங்கட குழந்தை ஹாப்பி வாயால் இந்த உபநிஷத் வாக்கியங்களைக் கேட்க மிகவும் ஹாப்பியோ ஹாப்பியாக உள்ளது.

    ஆனந்தம் .... ஆனந்தம் .... ஆனந்தமே !

    பதிவுகள் தொடரட்டும் ......

    ReplyDelete
  2. வாங்கோ கோபு பெரிப்பா..நன்றி

    ReplyDelete