Followers

Followers

Friday 28 October 2016

கிரிவலம்....காஞ்சி பெரியவா.(10).நிறைவு...

வந்தது முப்பது மூட்டை அரிசிங்கறதை யாருமே மகா பெரிவா கிட்டே சொல்லலை. அது மட்டுமல்லாம, அன்னதானம் பண்ணணும்னு ஆசார்யா நேரடியா யார்கிட்டேயும் சொல்லலை. சொப்பனத்துல வந்த காட்சியை வைச்சுதான் பாதிராத்திரியில தீர்மானமே பண்ணினாங்க. இதெல்லாம் எப்படி அவருக்கு தெரிஞ்சுது? இதையெல்லாம்விட புரிஞ்சுக்கவே முடியாத புதிர் என்ன தெரியுமா? சமைச்ச முப்பது மூட்டை அரிசி ரொம்ப சரியா கிரிவலம் வந்த கடைசி நபருக்குக் குடுத்ததோட தீர்ந்துடுத்து. அதுக்கப்புறம் யாரும் வலமும் வரலை. அன்னமும் மீறலை.

கிரிவலம் வர்றவாளுக்கு அன்னதானம் பண்ணணும்கறதை தீர்மானிச்சது யாரோ, அவரேதான் அதுக்கான அரிசி உள்ளிட்ட எல்லாத்தையும் கொண்டுவந்து சேர்த்திருக்கார்ங்கறது அப்போதான் எல்லாருக்கும் புரிஞ்சுது. தெய்வம் அசரீரியாவோ கனவுல வந்தோ பேசும்னு சொல்லுவாளே, அதேமாதிர பரமாசார்யாளும் தன்னோட தீர்மானத்தை மத்தவாளுக்கு எந்த ரூபத்துல வந்து வேணும்னாலும் தெரியப்படுத்துவார்ங்கறதையும் உணர முடிஞ்சது.

4 comments:

  1. மிகவும் ஆச்சர்யமான சம்பவம். அழகாகச் சொல்லப்பட்டுள்ளது. புரிந்துகொள்ளும் திறமை உள்ளோருக்கு மட்டுமே நிச்சயமாக இதன் பின்னணி என்னவென்று புரியக்கூடும். பகிர்வுக்கு நன்றிகள்.

    நல்லதொரு தொடர் நிறைவாக இனிதா நிறைவடைந்துள்ளதில் மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  2. ஹாப்பியின் வெற்றிகரமான இன்றைய இந்த 25-வது பதிவுக்குப் பாராட்டுகள். நல்வாழ்த்துகள்.

    அதுவும் தீபாவளித்திருநாளில் மும்பையிலிருந்து மாமா அன்புடன் அனுப்பியுள்ள ஸ்வீட்ஸ் + + + + + உடன் நிகழ்ந்துள்ளதில் மேலும் மகிழ்ச்சியே. :)))))

    வாழ்க ! என்றும் இந்த ஹாப்பி நிலைத்திருக்கட்டும்.

    ReplyDelete
  3. ....))))))கோபு பெரிப்பாவின் ஆசிகள் இருக்கும்போது எனக்கென்ன குறை..

    ReplyDelete
    Replies
    1. happy 30 October 2016 at 22:57

      //....)))))) கோபு பெரிப்பாவின் ஆசிகள் இருக்கும்போது எனக்கென்ன குறை..//

      அதி ஸீக்ரமேவ விவாஹப் ப்ராப்தி ரஸ்து ! :)))))

      http://gopu1949.blogspot.in/2014/03/vgk-10.html
      இதனை கட்டாயமாகப் படித்துப்பாரு.

      தலைப்பு: மறக்க மனம் கூடுதில்லையே (காதல் கதை)

      Delete