Followers

Followers

Saturday 22 October 2016

கிரிவலம்...காஞ்சி பெரியவா..(3)..

பௌர்ணமியில திருவண்ணாமலையில கிரிவலம் போறமாதிரி பர்வத மலையை மார்கழி மாசம் ஒண்ணம்தேதி பிரதட்சணம் பண்றது சுத்துவட்டாரத்துல உள்ள கிராமத்து மக்களோட வழக்கம். பரமாசார்யா எப்போல்லாம் அந்தப் பக்கமா போறாரோ அப்போல்லாம் அந்த மலையை பிரதட்சணம் பண்ணிடுவார். தோராயமா முப்பத்தஞ்சு, முப்பத்தாறு கிலோமீட்டர் தூரம் சுத்திவர வேண்டியது இருக்கும். ஆசார்யா கூட போறவாள்லாம், மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க நடப்பா. ஆனா, பெரியவா வழக்கமா சாதாரணப் பாதையில நடக்கறதைவிட ரொம்ப வேகமா, அதேசமயம் கொஞ்சமும் தடுமாறாம அந்த மலைப்பாதையில நடப்பார்.

2 comments:

  1. கிரிவலம்...காஞ்சி பெரியவா..(3)..

    அருமையோ அருமை.

    ஆமாம் மஹா பெரியவா ஸ்பீடுக்கு நம்மால் அவரைத் தொடர்ந்து நடக்கவே முடியாது. பலநேரங்களில் நாம் அவரைத் துரத்தியபடி ஓட வேண்டி இருக்கும்.

    தபோ வலிமை + ஆகாரக் கட்டுப்பாடுகளால் அவரின் சரீரம் மிகவும் லேஸான காற்றுப்போலத்தான் .... தக்கை போலத்தான் இருக்கும்.

    பகிர்வுக்கு நன்றிகள். மேலும் தொடரட்டும்........

    ReplyDelete
  2. நன்றி பெரிப்பா...

    ReplyDelete