Followers

Followers

Tuesday 25 October 2016

கிரிவலம்....காஞ்சி பெரியவா..(7)..

அதுல இருந்து இறங்கிவந்த ஒருத்தர், "என்ன ஆச்சர்யம்! எல்லாரும் தூங்கிண்டு இருப்பேள்னு நினைச்சேன். முழிச்சுண்டு இருக்கேளே... நான் பக்கத்து ஊர்க்காரன். பரமாசார்யா பிடி அரிசித் திட்டத்தை அறிவிச்சதுல இருந்து எங்க ஊர்க்காரா எல்லாரும் அதைத் தட்டாம செஞ்சுண்டு இருக்கோம். மூணுமாசமா சேர்த்த அரிசியை காஞ்சிபுரத்துல கொண்டு வந்து தரலாம்னு நினைச்சுண்டு இருந்தப்போ, ஆசார்யா இங்கேயே முகாம் போட்டிருக்கான்னு தெரிஞ்சுது. அதான் இங்கேயே கொடுத்துடலாம்னு கொண்டு வந்தேன்' சொல்லிவிட்டு அரிசி மூட்டைகளை இறக்கிவைக்க ஆரம்பிச்சார்.

கிட்டத்தட்ட முப்பது மூட்டை அரிசியோட சர்க்கரை, உளுந்தும் இறக்கிவைச்சார். அதெல்லாமும் சிலர் குடுத்ததா சொன்னார். "விடியற்காலம்பறவே எனக்கு முக்கியமான வேலை இருக்கு. அதனால ஆசார்யாகிட்டே என்னோட வந்தனத்தை சொல்லிடுங்கோ, நான் புறப்படறேன்'னு சொன்னவர் பதிலுக்குக்கூட காத்துண்டு இருக்காம புறப்பட்டுப் போயிட்டார்.

4 comments:

  1. //பரமாசார்யா பிடி அரிசித் திட்டத்தை அறிவிச்சதுல இருந்து....//

    மிகவும் அருமையான திட்டம் அது.

    தினமும் நாம் நம் சாப்பாட்டுக்கு அரிசி எடுத்து அதனைக் களையும் முன்பு அதில் ஒரே ஒரு பிடி அரிசியை மட்டும், ஒரு பைசாவுடன் சேர்த்து, தனியே ஒரு பானையில் போட்டு பூஜை அறையில் வைக்கணும்.

    ஒரு மாதம் ஆனதும், அமாவாசை போன்ற விசேஷ நாட்களாகப் பார்த்து, அதை யாரேனும் ஏழைகளுக்குக் கொடுத்து விடணும். யாரும் அதுபோல ஏழைகள் நம் கண்ணுக்குத் தெரியாமல் இருந்தால், அருகே உள்ள கோயிலில் மடப்பள்ளியில் சேர்த்து விடணும்.

    ஒவ்வொரு குடும்பத்துக்கும் சுலபமாகப் புண்ணியம் கிடைக்க எத்தனை சுலபமான, அழகான, அருமையான திட்டம்.

    ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளுக்கு ஈடு இணையான குருநாதர் யாரும் கிடையாது.

    ReplyDelete
  2. ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாள் போன்ற மஹான்கள் மனதில் ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டும் என நினைத்துவிட்டால் போதும். அது எப்படியோ விக்னமேதும் இல்லாமல் வெகு அழகாக நடந்துவிடும் என்பதைச் சொல்லும் இந்தத் தொடர் படிக்க ஹாப்பியாக உள்ளது.

    தொடரட்டும்.......

    ReplyDelete
  3. ஆமா பெரிப்பா அம்மா இருந்த நாள்லேந்தே பிடி அரிசி திட்டம் எங்காத்துல கடைப்பிடிக்கறோம் கோவில் மடப்பள்ளிலதான் கொடுக்கறோம்

    ReplyDelete
    Replies
    1. happy 25 October 2016 at 22:27

      //ஆமா பெரிப்பா அம்மா இருந்த நாள்லேந்தே பிடி அரிசி திட்டம் எங்காத்துல கடைப்பிடிக்கறோம். கோவில் மடப்பள்ளிலதான் கொடுக்கறோம்.//

      மிகவும் சந்தோஷம். உன் அம்மா ஆரம்பித்துக்கொடுத்துள்ளது மிகவும் நல்ல வழக்கம். அதை நீயும் தொடர்ந்து செய்து வருவது கேட்க மேலும் சந்தோஷம்.

      நாங்களும் முன்னொரு காலத்தில் இதுபோலெல்லாம் செய்து வந்தோம்.

      இப்போ வேறு மாதிரியாக மாற்றிச் செய்து வருகிறோம்.

      எப்படியோ பிறருக்குக் கொடுத்து தான தர்மங்கள் செய்து வந்தால்தான் நல்லதும்மா, ஹாப்பி.

      Delete