Followers

Followers

Tuesday 11 October 2016

விஜய தசமி

*வெற்றியை உணர்த்தும் விஜயதசமி !*

ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படும் 9 நாட்கள் விரதத்துடனான பண்டிகை நவராத்திரி.
நவம் என்றால் ஒன்பது. அந்த வகையில் அன்னை சக்தி தேவியை 9 நாட்களும் வெவ்வேறு ரூபங்களில் வழிபடும் மக்கள், மகிஷாசுரனை தேவியானவள் 9 நாட்கள் போரிட்டு வெற்றிவாகை சூடிய நாளே விஜயதசமியாகக் கொண்டாடப்படுகிறது.
மகிஷாசுரனுடன் போரிட்ட தேவி, பத்தாம் நாள் அவனை வென்றதையே இந்த நாள் குறிக்கிறது.
விஜய் - வெற்றி; தசமி - பத்து (தசம் என்றால் பத்து). இதனையே விஜயதசமி என்று கொண்டாடுகிறோம். எனவே 9 நாட்களும் விரதமிருந்து வழிபடுவோர், 10ம் நாளான இன்று அன்னையின் வெற்றியைக் கொண்டாடி விரதத்தை முடித்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
கொல்கட்டா போன்ற வடமாநிலங்களின் முக்கிய நகரங்களில் துர்கா பூஜையாகவும் விஜயதசமி அழைக்கப்படுகிறது. தேவியின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்ட அன்னையை ஊர்வலமாகக் கொண்டு செல்லும் வழக்கம் இன்றளவும் இருந்து வருகிறது.

எனவே விஜய தசமி என்றால், வெற்றி தருகிற நாள் என்று பொருள்படும்.
குழந்தைகளுக்கு விஜயதசமி தினத்தன்று ஆரம்பக் கல்வியை இந்த நாளில் ஆரம்பித்து வைப்பது தொன்று தொட்டு இருந்து வருகிறது. மேலும் இன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றி தரும் என்பது ஐதீகம்.
தவிர, உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா பண்டிகையும் விஜய தசமி நாளில் தான் கொண்டாடப்படுகிறது. தேவியின் வெற்றியைக் கொண்டாடும் விழாவாகவே தசரா பண்டிகை திகழ்கிறது. மைசூருவில் நடைபெறும் தசரா பண்டிகை ரத ஊர்வலத்தைக் காண இந்தியா மட்டுமில்லாது உலகின் பல்வேறு நாடுகளிலும் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் அங்கு கூடுவார்கள்.
மைசூரு தசரா பண்டிகையைப் போன்று தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் நடைபெறும் தசரா பண்டிகையும் மிகப் புகழ்பெற்றது. அங்குள்ள அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் இந்த பண்டிகையையொட்டி ஆயிரக்கணக்கானோர் கூடுவார்கள்.

10 comments:

  1. இனிய விஜயதசமி நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. *வெற்றியை உணர்த்தும் விஜயதசமி !*

    கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது.

    சீக்கரமாக எல்லோருக்கும் வெற்றி கிடைக்கட்டும்

    ReplyDelete
  3. //குழந்தைகளுக்கு விஜயதசமி தினத்தன்று ஆரம்பக் கல்வியை இந்த நாளில் ஆரம்பித்து வைப்பது தொன்று தொட்டு இருந்து வருகிறது. மேலும் இன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றி தரும் என்பது ஐதீகம்.//

    மிக்க மகிழ்ச்சி. பகிர்வுக்குப் பாராட்டுகள், வாழ்த்துகள், நன்றிகள்.

    ReplyDelete
  4. நான் உங்க கமெண்டுக்கு பதில் போடவே மறந்துட்டேனே... நன்றி பெரிப்பா..

    ReplyDelete
    Replies
    1. happy 20 October 2016 at 00:26

      //நான் உங்க கமெண்டுக்கு பதில் போடவே மறந்துட்டேனே...//

      உனக்கான என் ஆத்மார்த்தமான பிரார்த்தனைகளால் இனி உனக்கு வரப்போகும் சந்தோஷங்களால், நீ புதிய பதிவுகள் கொடுக்க மறந்தாலும், என்னையேகூட சுத்தமாக மறந்து போனாலும், நான் ஆச்சர்யப்படவே மாட்டேனாக்கும். :))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))).

      எப்படியோ எங்கட செல்லக்குழந்தை ஹாப்பி தன் வாழ்க்கை முழுவதும் ஹாப்பியோ ஹாப்பியாக இருக்கணும். அது மட்டும்தான் என் ஆசையாகும்.

      //நன்றி பெரிப்பா..//

      மிக்க நன்றி....டா செல்லம். இனிய நல்வாழ்த்துகள்.

      Delete
  5. //என்னையேகூட சுத்தமாக மறந்து போனாலும்//

    இப்பிடில்லாம் சொன்னா அழுதுடுவேன்.. அப்புறம்
    உன்கண்ணில் நீர் வழிந்தால் னு நீங்க பாடவீண்டி இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. happy 20 October 2016 at 01:02

      **என்னையேகூட சுத்தமாக மறந்து போனாலும்**

      //இப்பிடில்லாம் சொன்னா அழுதுடுவேன்.. அப்புறம்
      ”உன்கண்ணில் நீர் வழிந்தால்”ன்னு நீங்க பாடவேண்டி இருக்கும்//

      :))))) நான் ஒன்று சொன்னால் நீ நம்ப மாட்டாய் .....

      தொடர்ச்சியாக ’தொடரும்’ போட்டுக் கிடைத்த உன் மெயில்களை படித்து வரும்போது, நடுவில் ஒருசில இடங்களில் ’இது என்ன சோதனை’ என நினைத்து என் கண்களில் ரத்தம் வந்தது மட்டும் உண்மையே. :(

      உன்னுடைய கடைசி நிறைவுப்பகுதியைப் படித்ததும்தான், ஒருவழியாக நிம்மதியானது எனக்கு. அப்போதும் நான் மீண்டும் அழுதேன். ஆனால் அது ஆனந்தக்கண்ணீர் ஆக ஆனதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக இருந்தது. :)))))

      என்னை நீ மறந்தாலும் பரவாயில்லை. நீ மறக்கவே கூடாதவர்களை என்றும் மறக்காதே.

      நீடூழி ஹாப்பியோ ஹாப்பியாக என்றும் நீ வாழ ஆசீர்வதிக்கிறேன். பிரார்த்திக்கிறேன். அன்புடன்.....

      Delete
  6. திருப்பி திருப்பி அப்படியே சொல்லிண்டு இருக்கேள் பெரிப்பா... தேவ் குழந்தைய வளர்க்கும் சந்தோஷமும் அனுபவமும் மட்டுமே எனக்கு போறும்னு அமைதி ஆயிட்டேன். இப்ப எந்த சஞ்சலமும் இல்லை. பாட்டி...மாமா.. எனக்கு ஆதரவா இருக்காளே..இதுவே பெரிய கொடுப்பினைதானே பெரிப்பா.. எல்லாத்துக்கும் மேல என்னோட கோபு பெரிப்பா என் பக்கம் இருக்காங்களே.. வேற என்ன வேணும்
    குறையொன்றுமில்லை...

    ReplyDelete
    Replies
    1. happy

      //எல்லாத்துக்கும் மேல என்னோட கோபு பெரிப்பா என் பக்கம் இருக்காங்களே.. வேற என்ன வேணும்
      குறையொன்றுமில்லை...//

      மிக்க மகிழ்ச்சி....டா தங்கம்.

      நான் உயிருடன் இருக்கும்வரை, உனக்கு எல்லாவிதத்திலும் என் அன்பும், ஆதரவும், ஆசீர்வாதங்களும் நிறையவே உண்டு. கவலையே பட வேண்டாம்.

      பெரிப்பா பெரிம்மாவுக்கு சீக்கரமாகக் கல்யாணம் சாப்பாடு போடவும். ஆவலுடன் காத்திருக்கிறோம். :))))))))))))))

      அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்!

      Delete
  7. கல்யாண விஷயம்...மாமா கையில்தான் இருக்கு பெரிப்பா..

    ReplyDelete