Followers

Followers

Monday 3 October 2016

நவராத்திரி நாயகிகள்----(1)

நவராத்திரி நாயகியர்

நவராத்திரியில் பராசக்தியான துர்கா பரமேசுவரியையும், மகாலக்ஷ்மியையும், ஸரஸ்வதி தேவியையும் பூஜிக்கிறோம். மூன்று மூர்த்திகளாகச் சொன்னாலும், முப்பத்து முக்கோடி மூர்த்திகளாகச் சொன்னாலும், அத்தனையாகவும் இருப்பது ஒரே பராசக்திதான். இந்த உண்மையைத்தான் லலிதா ஸஹஸ்ரநாமம் பரதேவதையை வர்ணிக்கும்போது அவளே சிருஷ்டி செய்பவள் (ஸ்ருஷ்டிகர்த்ரீ - ப்ரஹ்ம ரூபா) அவளே பரிபாலனம் செய்பவள் (கோப்த்ரீ - கோவிந்த ரூபிணீ), அவளே சம்ஹாரம் செய்பவள் (ஸம்ஹாரிணீ - ருத்ரரூபா) என்று சொல்கிறது. லலிதையாக, துர்க்கையாக இருக்கிற பராசக்திதான் மஹாலக்ஷ்மியாகவும், ஸரஸ்வதியாகவும் இருக்கிறது. லக்ஷ்மி அஷ்டோத்தரத்தில் 'பிரம்ம விஷ்ணு சிவாத்மிகாயை நம:' என்று வருகிறது. ஸரஸ்வதி அஷ்டோத்தரத்திலும் இப்படியே ‘பிரம்ம விஷ்ணு சிவாத்மிகாயை நம:' என்று வருகிறது. படைப்பு, அழிப்பு, காப்பு எல்லாம் செய்வது ஒரே சக்திதான் என்று இந்த நாமங்கள் நமக்கு நன்றாக உணர்த்துகின்றன. ஒரே பராசக்திதான் வெவ்வேறு வேஷங்களைப் போட்டுக்கொண்டு வெவ்வேறு காரியங்களைச் செய்கிறது. துர்க்கையாக இருக்கிறபோது, வீரம், சக்தி எல்லாம் தருகிறது. மஹாலக்ஷ்மியாகி சம்பத்துக்களைத் தருகிறது. ஸரஸ்வதியாகி ஞானம் தருகிறது.

2 comments:

  1. ஆஹா, மிகவும் அருமையான பகிர்வு.

    இதனை எங்கட குழந்தை ஹாப்பி சொல்லிக் கேட்பது மிகவும் அழகோ அழகாக புதுமையாக உள்ளது.

    படிக்கப்படிக்கப் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. :)

    என்னைப் பொறுத்தவரை வெவ்வேறு வேஷங்கள் போட்டுள்ள ஒரே பராசக்தி எங்கட குழந்தை ஹாப்பியோ ஹாப்பியும் அவளின் கொழுகொழு மொழுமொழு கன்னத்தில் குழிவிழும் சிங்காரச் சிரிப்பழகும் மட்டுமே.

    இனிய நவராத்திரி நல் வாழ்த்துகள்..... டா, ஹாப்பி.

    ReplyDelete
  2. கோபு பெரிப்பா வாங்கோ.. என்னை அளவுக்கு அதிகமா புகழாதேங்கோ.. சங்கோஜமா இருக்கு..

    ReplyDelete